காங்கிரசில் திறமை அடிப்படையில் தேர்தல் டிக்கெட் வழங்கப்படும் என்று ராகுல்காந்தி அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அகில இந்திய காங்கிரஸ் துணைத் தலைவராக பொறுப்பேற்ற ராகுல்காந்தி கட்சியில் அதிரடி மாற்றங்கள் கொண்டு வரவும், பாராளுமன்ற தேர்தலை சந்திக்கவும் தயாராகி வருகிறார்.
இதுதொடர்பாக காங்கிரஸ் ஆளும் மாநில முதல்- மந்திரிகள் மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர்கள், மாநில சட்டசபை காங்கிரஸ் கட்சி தலைவர்கள் ஆகியோருடன் ராகுல்காந்தி டெல்லி யில் கடந்த 2 நாட்களாக ஆலோசனை நடத்தி வருகிறார்.
காலை 10.30 மணிக்கு தொடங்கிய கூட்டம் மதியம் 2 மணிக்கு முடிவடைந்தது. 2 நாட்களில் மொத்தம் 13 மணி நேரம் ராகுல்காந்தி ஆலோசனை நடத்தினார். முதல்-மந்திரிகள் மற்றும் மாநில தலைவர்கள் பிரதிநிதிகளின் கருத்துக்களை கேட்டறிந்தார்.
பெரும் பாலானவர்கள், பேசும்போது, மேலிடத்தில் செல்வாக்கு உள்ளவர்களுக்கு மட்டுமே தேர்தலில் போட்டியிட டிக்கெட் வழங்கப்படுவதாக குற்றம்சாட்டினார்கள். முடிவில் ராகுல்காந்தி விரிவாக உரையாற்றினார். அப்போது எதிர்கால திட்டங்கள் பற்றி அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார்.
ராகுல்காந்தி பேசியதாவது:-
மாநில காங்கிரஸ் தலைவர்கள் அடுத்த 3 மாதங்களுக்கு என்ன செய்யப் போகிறோம் என்பது குறித்து செயல் திட்டம் வகுத்து பணியாற்ற வேண்டும்.
தங்களது மாநிலங்களில் உள்ள முக்கிய பிரச்சினை களை மாநில காங்கிரஸ் தலைவர்கள் பட்டியலிட்டு தெரிவிக்க வேண்டும். அவற்றை சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சகத்திடம் கொண்டு சென்று தீர்வு பெறப்படும்.
சாதாரண வட்டம் முதல் மாநில நிர்வாகிகள் வரை காலியாக இருக்கும் கட்சி பதவிகள் குழுக்களின் பதவிகளை 2 மாதங்களில் நிரப்ப வேண்டும். மாநில காங்கிரஸ் தலைவர்கள் கட்சி அலுவலகங்களை விட்டு வெளியே சென்று கட்சிப் பணியாற்ற வேண்டும்.
மாதத்தில் குறைந்தது 10 நாட்களாவது மாவட்டந் தோறும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு தொண்டர் களின் குறைகளை கேட்டறிய வேண்டும்.
காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த 3 மாதங்களுக்கு ஒரு முறை அதுபோன்று கூட்டம் நடத்தி மாநில காங்கிரஸ் தலைவர்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்படும்.
காங்கிரஸ் சார்பில் தேர்தலில் போட்டியிட திறமையின் அடிப்படையில் மட்டுமே வாய்ப்பு அளிக்கப்படும்.
இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.
No comments:
Post a Comment