தென்கிழக்கு அரபிக் கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக வட தமிழகத்தில் ஒருசில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று இரவு இடியுடன் பலத்த மழை பெய்ய தொடங்கியது. விடிய விடிய பெய்த மழை தொடர்ந்து காலையிலும் நீடித்தது.
சென்னை புறநகர் பகுதியிலும், பரவலாக மழை பெய்து வருகிறது. வானம் இருண்டு மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. நகரில் ஒருசில இடங்களில் கனமழை கொட்டியது. இதனால் சாலையில் மழைநீர் தேங்கி நின்றது. சென்னை நுங்கம்பாக்கத் தில் 7.3 மில்லி மீட்டர் மழையும், மீனம்பாக்கத்தில் 7.6 மில்லி மீட்டரில் மழை பெய்துள்ளது.
திடீர் மழையால் சென்னையில் வெப்பம் தணிந்து குளிர்ச்சி காணப்படுகிறது. அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று இரவு 8.30 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை பலத்த மழை பெய்தது. திருவாலாங்காட்டில் மட்டும் விடிய விடிய மழை பெய்து கொண்டே இருந்தது. புறநகர் பகுதிகளான குன்றத்தூர், மாங்காடு, பூந்த மல்லி, நசரத்பேட்டை, திருவேற்காடு பகுதிகளில் நேற்று இரவு கனழை பெய்தது. இன்று காலை தூறிக் கொண்டு இருந்தது. குன்றத்தூர்- மாங்காடு இடையே உள்ள சாலை குண்டும் குழியுமாக கிடப்பதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
திருவள்ளூர் -55
திருத்தணி -28
ஊத்துக்கோட்டை -65
பொன்னேரி -37
கும்மிடிப்பூண்டி -20
பூண்டி -63
கொரட்டூர் -24
அம்பத்தூர் -24
தாமரைப்பாக்கம் -19
செம்பரப்பாக்கம் -17.5
பள்ளிப்பட்டு -10
ஆர்.கே.பேட்டை -17
செங்குன்றம் -16
சோழவரம் -13
திருவலங்காடு -122
வேலூர் மாவட்டம் ஆம்பூர், அரக்கோணம், குடியாத்தம், வாணியம்பாடி, ராணிப்பேட்டை பகுதியில் நேற்று இரவு முதல் மழை விட்டு விட்டு பெய்தது. இதனால் தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கி உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்திலும் ஒரு சில இடங்களில் பரவலாக மழை பெய்தது. கரூர் நகர் பகுதியில் 5.8 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. வேலாயுதம் பாளையம், அரவக்குறிச்சி, குளித்தலை, கிருஷ்ண ராயபுரம் ஆகிய பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்தது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடலோர பகுதிகளான கட்டுமாவடி, கோட்டைபட்டிணம் ஆகிய இடங்களில் மட்டும் பலத்த காற்றுடன் லேசான மழை பெய்தது. திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் எங்கும் மழை இல்லை. ஒரு சில இடங்களில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக லேசான மழைபெய்தது. நேற்று இரவு லேசான சாரல் மழை பெய்தது.

No comments:
Post a Comment